Saturday, December 3, 2011

தமிழகத்தின் மேம்படுத்தபட்ட செயற்கைகோள் வரைபடம்!

இன்று காலை கூகிளிடமிருந்து ஒரு மின்னஞ்சல்!

We're happy to let you know that the imagery of the point of interest, "Karaikal, India", has been updated!

பொதுவாகவே, நான் அடிக்கடி நமதூர் செயற்கைகோள் வரைபடத்தை கூகிள் மேப்ஸ்சில் பார்ப்பது வழக்கம். ஆனால் அது எப்போதுமே 2009-ல் உள்ள வரைபடத்தையே காண்பிக்கும். அதுவும் எங்கள் ஊரான காரைக்காலை மேகம் மறைத்தபடியே இருக்கும். இதை நான் கூகிளுக்கு தெரிவித்தபோது, அவர்களுக்கு வரும் மேம்படுத்த கோரிக்கையை (update request) பொருத்தே இந்த இடம் update செய்யப்படும் என்பதை அறிந்துகொண்டேன். கிட்டதட்ட ஒரு வருடமாக நேரம் கிடைக்கும்போதேல்லாம் இதற்க்கான மின்னஞ்சலை அனுப்பினேன். என்னைப்போல வேறு பலரும் அனுப்பியிருக்கலாம். இதனை பொருத்து இன்று Google maps இந்த இடங்களை update செய்துள்ளது. அநேகமாக இதன் விளைவாக தமிழகத்தின் மற்ற இடங்களும் update செய்யப்பட்டிருக்கலாம். பார்த்து மகிழுங்கள்!
http://maps.google.com

(காரை கமால்)

Monday, November 28, 2011

சமூக வலைதள நண்பர்களுக்கு!!!

சமூக வலைதள  நண்பர்களுக்கு!!!

பொதுவாக நாம்
சமூக வலைதளங்களை 90 சதவிகிதம் நமக்கு வரும் பல செய்திகளை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளவே பயன்படுத்துகிறோம். மிச்சமுள்ள 10 சதவிகிதம் மற்ற இணையதளங்களில் உள்ள செய்திகளை சமூக வலைதளங்களுக்குகொண்டுவருகிறோம். நம்மில் எத்தணை பேர் நம்முடைய அனுபவங்களை எழுதியிருக்கிறோம்? நம்முடைய சிந்தனைகளை பகிர்ந்து கொண்டிருக்கிறோம்?

என்னைபோல், பல நண்பர்களுக்கு எழுதவேண்டுமென்ற எண்ணம் இருந்தும், எப்படி எழுதுவது, எதில் எழுதுவது, நமக்குத்தான் தாய் மொழியை முழுமையா பேசவே வராது அப்புறம் எப்படி தவறில்லாமல் இடுக்குவது போன்ற பல யோசனைகள் கண்டிப்பாக இருக்குமென்று நினைக்கிறேன். கவலைகள் வேண்டாம், கிழே உள்ள இணைப்பை சொடுக்கி Azhagi+ என்ற மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
http://azhagi.com/plus.html
தினமும் ஒரு அரை மணி நேரம் ஒதுக்கி பயிற்சி எடுங்கள். ஒரு வாரப் பயிற்சி போதுமானதே!
ஆங்கிலத்திலிருந்து சொற்களை மொழிபெயர்க்க Google translate (http://translate.google.com/) ஒரளவு கை கொடுக்கும்.

இதோ நான் எழுதுகிறேன். நீங்களும் முயற்சி செய்யுங்கள்.
(காரை கமால்)

எதை தொலைத்தோம்? எதை பெற்றோம்?

பேனாவை தொலைத்தோம், KeyBoard பெற்றோம்!
கடிதத்தை தொலைத்தோம், Email பெற்றோம்!
முகவரியை தொலைத்தோம், Email Address பெற்றோம்!
எழுதுவதையே தொலைத்தோம், Cell Phone பெற்றோம்!!!

எதை தொலைத்தோம்? எதை பெற்றோம்? 
மணகணக்கை தொலைத்தோம், Calculator பெற்றோம்!
ஞாபக சக்தியை தொலைத்தோம், Contacts பெற்றோம்!
தெரு விளையாட்டை தொலைத்தோம், Video Games பெற்றோம்!
சுய சிந்தனையையே தொலைத்தோம், Google Search பெற்றோம்!!! 
எதை தொலைத்தோம்? எதை பெற்றோம்?

காரை கமால்